வ.உ.சி பூங்காவிற்கு புதுவரவு


கோவை, நவம்பர் 13

கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில், புள்ளிமான் ஒன்று கடந்த வாரம் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. சுட்டித்தனமாக துள்ளித்திரியும் இந்த குட்டிமான்களை காண பொதுமக்களும் குழந்தைகளும் இப்பூங்காவில் குவிந்துவருகின்றனர்.



கோவை நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வ.உ.சி பூங்கா காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் மயில், பாம்பு, பச்சைக்கிளி, கழுகு, குரங்கு என பல்வேறு வகையான உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், அறிய வகை மான் இனங்களான உயரமான கடை மான்களும், அழகான புள்ளிமான்களும் இங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை புள்ளிமான் ஒன்று அழகான ஆண் மானையும், அடுத்த இரு நாட்களில் ஒரு பெண் மானையும் ஈன்றுள்ளது. இதனால், 25 ஆக இருந்த புள்ளிமான்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆக அதிகரித்துள்ளது.



‘அழிந்துவரும் அறியவகை மான் இனமான, புள்ளிமான்களை இங்கு பாதுகாப்பாக வளர்த்து, பராமரித்து வருகின்றோம். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அழிப்பதால், அனைத்து புள்ளிமான்களும் உற்சாகமாக துள்ளித் திரிகின்றன. புதிதாக பிறந்துள்ள மான் குட்டிகள், பார்வையாளர்களை மட்டுமின்றி பூங்காவின் பராமரிப்பாளர்களையும் கவர்ந்து விடுகின்றன. இங்குள்ள புள்ளிமான்கள் ஆரோக்கியமாக பராமரிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார் வ.உ.சி பூங்காவின் இயக்குனர் திரு. செந்தில் நாதன்.

தாய் மானின் கால்களுக்கு இடையில் சுற்றித்திரிந்து, பால் குடிக்கும் இந்த மான் குட்டிகளை காண நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது.

‘படங்களில் பார்த்த புள்ளிமான்களை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, பிறந்த ஒரு வாரம் ஆன, குட்டி மான்களை இப்போது தான் பார்க்கின்றோம். அவை செய்யும் சேட்டைகள் மிக அழகாக உள்ளது. வார விடுமுறையில் தவறாமல் இங்கு வந்து குட்டி மான்களை பார்த்துச் செல்வேன்’ என்று கூறினார் பள்ளி சுற்றுலா வந்த முதலாம் வகுப்பு மாணவி வஹிஷா.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...