வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு

கோவை, நவம்பர் 14

வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்க கடலின் தென் மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளது. இது, வடக்கு நோக்கி, அதாவது, ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிக்கு இரண்டு நாட்களில் நகர்ந்து விடும். தற்போதைய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், கன மழை பெய்யலாம். இவ்வாறு அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வட கடலோர மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைக்கு பிறகு ஒடிசாவின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

Newsletter

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...