கோவையில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

கோவை, நவம்பர் 14

கோவை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.



மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்கும் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது கடமை. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது கிடையாது. நேரடியாக உத்தரவும் பிறப்பிப்பது இல்லை. 

ஆனால், சமீபத்தில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் இன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

ஆனால், இதனை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சை ஏற்படுத்த தேவையில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூறிவிட முடியாது, அதிகாரத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார் .

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...