அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் - திண்டுக்கல் சீனிவாசன்

கோவை, நவம்பர் 16: அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுநர் ஆய்வு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சரின் கருத்தே தனது கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தில் ஆளுநர் நல்ல பணிகளையே செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தால் ஏற்று கொண்டிருக்க வேண்டும். 

அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன். அமைச்சர் இல்லாமல், அரசு அதிகாரிகளை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதால் மாநில உரிமை பறிபோகாது. மத்திய அரசு திட்டத்தின் செயல்பாட்டையே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் வேறு மாநில ஆளுநராக இருந்த இடங்களில் இது போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்றார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுக கட்சி அழிந்துவிடும் என்றும், ஊழல் ஆட்சி எனக் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இது மக்களுக்கான ஊழலற்ற ஆட்சி. எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கட்சிகளை பற்றி சந்தர்பம் வரும்போது விமர்சனம் செய்வோம். இவ்வாறு கூறினார். 

கோவை ஆணைகட்டியில் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கைகளும எடுத்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்திருப்பது இயற்கையானது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...