போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனையில் சதி - டிடிவி தினகரன் பேட்டி

நவம்பர் 18: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது என்று அதிமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 4 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது. 

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ள டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக அரசியல் சதி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேட்டி அளிக்கையில், போயஸ் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரி சோதனை நடந்தது. சந்தேகத்தின் பேரில் சோதனை நடந்துள்ளது, சோதனை நடைபெறுவதால் தவறு நடந்துள்ளது என கூறிவிட முடியாது. போயஸ் இல்லத்தில் இருந்து பென் டிரைவ், லேப்டாப் மற்றும் சில கடிதங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

எப்படியாவது எங்களை அரசியலில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனை. எந்த அச்சுறுத்தலுக்கும், நடவடிக்கைக்கும் பயப்பட மாட்டேன். சோதனை நடப்பதால் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. உண்மையாக சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தியிருக்க வேண்டும். பதவியையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...