மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு விருது


கோவை, நவம்பர் 18: கோவையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்க உள்ளனர்.

மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வரும் 20-ம் தேதி காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இந்திய நாட்டின் ஏழை, எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் துணையாகவும், ஒரு பாலமாகவும் விளங்குவது கூட்டுறவு சங்கங்களாகும். 

ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் 100 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன . இவ்வாறு கூட்டுறவு சங்கங்கள் ஏழை எளிய மக்களின் முதுகெலும்பாகவிளங்குகின்றன என்பதை அறிந்தே தமிழக அரசு கூட்டுறவுத்துறைக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலும், கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதன் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகின்றது. 

இதனையொட்டி, மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் முன்னிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், வறுமையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு நிதியுதவித்தொகைகளும், கூட்டுறவு வாரவிழாவினையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கவுள்ளனர். 

 தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம் வரவேற்புரையாற்றவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றவும், கூட்டுறவு உணவுப்பாதுகாப்புத்துறை செயலர் குமார்ஜெயந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலையுரையாற்றவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் நன்றியுரையாற்றவும் உள்ளனர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தினை பறைசாற்றும் வகையிலான நாடகங்களும், கலை நிகழச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். எனவே, இவ்விழாவில் கூட்டுறவே நமது நாட்டுயர்வு என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...