வாழை உற்பத்தியில் பின்னோக்கி செல்லும் கோவை மாவட்டம்

கோவை, நவம்பர் 18: கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகளில் உள்ள வாழை விவசாயிகள் உரம்போன்ற அத்தியாவசிய பொருட்களின்விலை உயர்வால் வாழை உற்பத்தியை குறைத்துள்ளனர்.

தேசிய அளவில் வாழைப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வந்த தமிழகம், அதன் முக்கியத்துவத்தை இழக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து இழப்பை சந்தித்துவரும் வாழை விவசாயிகள் பலரும்மாற்றுப்பயிர் சாகுபடிக்கு தேடிசெல்வதால் வாழை உற்பத்தி குறைந்து வருகிறது. இதன் காரணமாக விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்கள்தான் வரிசைப்படி தேசிய அளவில் வாழைஉற்பத்தியில் முன்னணியில் உள்ளன. "இந்தியாவில்ஆண்டுஉற்பத்தி 2.97 கோடிடன் என்ற நிலையில் தமிழகத்தின்வாழைசாகுபடி பரப்பளவு 2.85 லட்சம் ஏக்கர் இதில் ஆண்டுக்கு 56 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி என்ற அளவில்முதலிடத்தில் உள்ளது" என வாழை விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பூவன், செவ்வாழை, ரோபஸ்டா, ரஸ்தாளி, விருப்பாச்சி, நேந்திரன் போன்ற வாழைவகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. வாழை உற்பத்தியில் தமிழகத்தின், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி,தூத்துக்குடி, கரூர், சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் வாழைசாகுபடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கன.

கோவை மாவட்டத்தில் வாழை விவசாயம் குறைந்துக்கொண்டே வருகிறது. கோவை மாவட்டத்தின்,மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழில். இங்கு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விளையும் வாழையின் தரமும் சுவையும் அதிகம் என்பதால் இந்திய அளவில் வரவேற்பும் அதிகம்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் வாழைவிவசாயம் செய்துவரும் செ.வேலுச்சாமி கூறுகையில் "சுமார் 500 ஏக்கருக்கும் மேல் வாழை விவசாயம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றுவருகிறது. இங்கு விளையும் வாழைகளின் தரம் மிகவும் நன்றாக உள்ள காரணத்தினால் வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.வாழை விவசாயத்தை நம்பி மட்டுமே 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றது" என்றார் அவர்.

சமீபகாலமாக தண்ணீர் பற்றாக்குறை, பத்துமாத பயிரான வாழைக்கு பயன்படுத்தும் உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் கடுமையானவிலையேற்றம், சூறாவளி போன்ற திடீர் இயற்கை சீற்றம் மற்றும் வனவிலங்குகளால் தொந்தரவு போன்ற காரணங்களால் வாழை விவசாயம் பாதிப்படைந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இயற்கைசீற்றங்களால் சேதமடையும் வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாததும் விவசாயம் குறைவிற்கு காரணமாக உள்ளது.

இதுகுறித்து விவசாயி சக்திவேல் கூறுகையில் "பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் கடன்களை வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். அவ்வாறு கஷ்டப்பட்டு விவசாயம் செய்தும் உரியலாபம் கிடைக்காமல் சில சமயங்களில் நஷ்டம் ஏற்படுகிறது. மழை, புயலால் சேதம் அடையும் சமயத்தில் உரிய இழப்பீடு கிடைக்காமல் தவிக்கிறோம் இதேநிலை நீடித்தால் வாழை விவசாயத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை" என்றார் அவர்.

பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம் போன்ற காரணங்கள் விளைச்சல் குறைகிறது. இது போன்ற காரணங்கினால் மாற்று விவசாயத்தை தேடி விவசாயிகள் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

பணப்பயிரான வாழை அரசின் தோட்டக்கலைதுறையின் கீழ் வருவதால் இத்துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள், வாழை விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு தேவையானஆலோசனைகள், நவீன வேளாண் தொழில்நுட்ப உதவிகள் செய்வதோடு வாழை விவசாயத்தில் நூறுசதவீதம் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி ஊக்குவித்தால் தண்ணீர் தேவை குறையும்.

அதே போல இயற்கை சீற்றங்களினால் வாழைமரங்கள் பாதிப்படையும் போது உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவும் செய்தாலே வாழை உற்பத்தியை அதிகரித்து இதன் விலையினையும் கட்டுக்குள்வைத்திட உதவும் என்கின்றனர் வேளாண் வல்லுனர்கள்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...