டிச.,16-ல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் - ராகுல் காந்தியைத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றம்

நவம்பர் 20: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில், கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

கடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். சுமார் 19 ஆண்டுகள் அவரே தலைவர் பதவியில் இருப்பதாலும், அவரது உடல்நிலை கருதியும் புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா தலைமையில் இன்று நடந்தது. 

கூட்டத்திற்குப் பிறகு கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே சமயம், கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்வது தொடர்பான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ராகுலை தவிர வேறும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், வேட்புமனு தாக்கலில் கடைசி நாளில் ராகுலை கட்சியின் தலைவராக முறைப்படி அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்டாலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், அதுவரை கட்சி தலைவராக சோனியாவே தொடர்வார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒருவேளைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...