உதவித் தொகைக் கோரி எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குழந்தையுடன் மனு


கோவை, நவம்பர் 20: அரசின் உதவித்தொகையை வழங்கக்கோரி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குபேந்திரன். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இவர், கோபியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 45 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் உதவித் தொகையை வழங்கக் கோரி கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பால்வினை நோய்க்கு மருந்துகள் எடுத்து வருவதாக கூறிய அவர்கள், அரசு வழங்கும் உதவித்தொகைக் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை மனு அளித்தும் எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ வேண்டும் என்ற நம்பிக்கை தரும் அரசு, அதற்கான உதவி தொகையை அளிக்காமல் இழுத்தடிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 

மேலும், தமிழக அரசால் வழங்கப்படும் பிரசவகால உதவித் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய தம்பதியினர், அரசு தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விரைவாக உதவித் தொகைக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...