சசிகலா குடும்பத்தினர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது குறித்து வருமான வரித்துறை விளக்கம்

நவம்பர் 21:

சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் போயஸ் கார்டனில், உறுதியான தகவலின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரகாலம் தீவிர சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் மற்றும் கோடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பல்வேறு போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். வருமான வரி சோதனையில் சிக்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக சோதனை நடத்தப்பட்டதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சசிகலா, டிடிவி தினகரனின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:- வரி ஏய்ப்பு குறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அதன் பிறகே சோதனை நடத்தப்பட்டது. உறுதியான தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தான் சோதனை நடந்தது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை செய்யப்பட்டது. அந்த அறைகளின் சாவிகள் இளவரசியின் மருமகனான ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த தொடர் சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பென் டிரைவ்கள் மற்றும் லேப்டாப் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சோதனை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தேவையெனில் நீதிமன்ற அனுமதி பெற்று சசிகலா மற்றும் இளவரசியிடமும் விசாரணை நடத்தப்படும். தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் சோதனையின்போது துணை ராணுவத்தை நாடவில்லை. இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...