ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம்

நவம்பர் 22:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, திமுக மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான சரவணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்துள்ளனர்.

இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை விசாரணை தொடங்கியது. தி.மு.க. மருத்துவர் அணி துணை தலைவர் சரவணன் உள்ளிட்ட சிலர் வருகை தந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை ஆணையம் சார்பில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2 அரசு மருத்துவர்களுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து அரசு மருத்துவர்கள் நாளை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார், எப்போது பிரமாண பத்திரம் அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் யாராக இருந்தாலும் விசாரணை நடத்தப்படும். உண்மையை வெளிக்கொண்டு வர விசாரணை முழுமையாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...