டிச.,15-க்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்

நவம்பர் 22:

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விரைவில் தில்லி செல்ல உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்கே நகர் சட்டசபை தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால், தேர்தல் ரத்தானது. 

இதையடுத்து, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், அதன்படி, தேர்தல் நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு, வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது. இதனிடையே, போலி வாக்காளர்களை நீக்க கோரிய திமுக தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை, டிசம்பருக்குள் நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தில்லி செல்ல உள்ளார். அப்போது, தலைமை தேர்தல் ஆணையருடன் நடக்கும் ஆலோசனைக்கு பிறகு, விரைவில் தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் தேர்தலின் போது பயன்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...