கிராமங்கள் வழியாக செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி


கோவை, நவம்பர் 22

கோவை கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க கிராமங்கள் வழியாக செல்லும் சிறிய மற்றும் கனரக வாகனங்களால் அப்பகுதி மக்கள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கோவையிலிருந்து சேலம் வழியாக கார்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பாலக்காடு வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்ல முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக NH 47 திகழ்கிறது. மத்திய அரசாங்கத்தின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கிழ் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு கடந்த ஈராண்டுக்கு முன் இச்சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் சுங்கச்சாவடி கட்டண மையம் அமைக்கப்பட்டது. சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள கிராமங்களில் வசித்து வருவோர் அடையாள சான்றிதழ் காட்டி சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம்.

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க வாகனங்கள்   கணியூர் அருகே வரும் போது அருகில் உள்ள கிராமங்களான தென்னம்பாளையம், சோமனூர், சின்னியம்பாளையம், மோரிப்பாளையம், முதலிபாளையம் வழியாக செல்கின்றன. கிராம சாலைகள் மிகவும் குறுகலாகவும், நெடுஞ்சாலைகளை விட தரம் குறைந்ததாகவும் உள்ள காரணத்தினால் சேதம் அடைக்கின்றன. கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலை வழியாக  தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களும், சாலையில் இருசக்கர வாகனத்தின் பயணிப்போர் விபத்துகளில் சிக்குவதும் அதிக அளவில் ஏற்படுகின்றன என கிராம வாசிகள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பா. பூபாலன் கூறுகையில் “ சுங்கச்சாவடி கட்டணம் காரணமாக வாகனங்கள் கிராமங்கள் வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. கிராமபுறச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் தடுக்க தடுப்புகள் வைக்கப்படுகிறது ஆனாலும் அதனை மீறி வாகனங்கள் உள்ளே வந்து செல்கின்றன” என்றார்.

காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அப்பகுதிகளில் செல்வதால் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர்

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்” கனரக வாகனங்கள் கிராமப்புற சாலை வழியாக செல்வதை மட்டுமே தடுக்க முடியும். சிறிய ரக வாகனங்கள் செல்வதை தடுக்க இயலாது. எனினும் போக்குவரத்துக்கு இடையுறு ஏற்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடாக தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.” என்றார்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தி வாகனங்களின் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்களுக்கு தீர்வு ஏற்படும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.    

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...