இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கோவை, நவம்பர் 22

பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 43 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத்துறையின் (எம்.எஸ்.டி.இ) சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி வகுப்பிற்குக் குறைந்தபட்சம் 5-வது படித்திருந்தால் போதுமானது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளித் தொழில் சங்கங்களில் இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு முக்கியமானதாகும். இந்த அமைப்பானது, ஜவுளித்துறையில் பல்வேறு விதமான தொழில் போட்டிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைப் போக்கும் நடவடிக்கையாக, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுபவமில்லாத 50,000 பேருக்கு, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...