கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பதிப்பு அறிமுகம்

கோவை, நவம்பர் 24

கோயம்புத்தூர் தினமான இன்று ‘கோயம்புத்தூர் விழா - பத்தாவது பதிப்பின்’ தொடக்க நிகழ்ச்சி, டவுன் ஹாலில் உள்ள விக்டோரியா நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பதிப்பை, ஜனவரி 5 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும். இவ்விழாவின் சிறப்பு அம்சங்களாக இரண்டடுக்கு பேருந்து, உணவு திருவிழா, ஓவிய கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், தொடக்க நிகழ்ச்சியில் ‘யங் இன்டியன்ஸ்’ அமைப்பினர் தெரிவித்தனர்.



கடந்த 9 ஆண்டுகளாக கோவை மக்களால் கொண்டாடப்படும் ‘கோயம்புத்தூர் விழா’ நிகழ்ச்சியை, இந்திய தொழிற்கூட்டமைப்பின் ஓர் அங்கமான, ‘யங் இன்டியன்ஸ்’ அமைப்பின் கோவை கிளை நடத்திவருகின்றது. இவ்விழாவில் கோவை மக்களின் பண்பாடு, கலை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு, உணவு, திறமை மற்றும் சமூக உணர்வுகள் போன்றவை வண்ணமயமாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.

இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ‘யங் இன்டியான்ஸ்’ அமைப்பின் தலைவர் திரு. பிரசன்னா கிருஷ்ணன் கூறியதாவது, ‘கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பத்திப்பில் சென்ற ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் கோவை மக்கள் பங்கேற்ப்பார்கள். இரண்டடுக்கு பேருந்தில் பயணம் செய்து கோவையின் பழமையான பகுதிகளை சுற்றிப்பார்க்கலாம், நகரின் முக்கிய வீதிகள் திருவிழா தோரணங்களால் அலங்கரிக்கப்படும்,வ உ சி  மைதானத்தில் நடைபெறும் உணவு திருவிழா, திரைப்பட விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதுமட்டுமின்றி, கோவை மக்கள் தங்களின் திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்ட இவ்விழாவில் மேடை அமைத்துத் தரப்படும்’ என்று கூறினார்.

மேலும், ‘இவ்விழா கோவை மக்களுக்காக, மக்களே கொண்டாடும் திருவிழாவாக அமைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கோவையின் பெருமைகளை எடுத்துக்கூறும் ‘கோவைப் பாடல்’ மற்றும் கோயம்புத்தூர் விழாவின் செயலி ஆகியவை வெளியிடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் திரு. K. விஜய கார்த்திகேயன், போக்குவரத்து துணை ஆணையர் திரு. சுஜித் குமார் மற்றும் இந்திய தொழிற்கூட்டமைப்பு, கொடிசியா, யங் இன்டியன்ஸ் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...