"ரகுவை கொன்றது யார்?": அழிக்கப்பட்டது சாலையில் எழுதப்பட்ட வாசகம்

கோவை, நவம்பர் 27

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் சாலையில் எழுதப்பட்ட "WHO KILLED RAGU?" என்ற வாசகம் அழிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி (32) என்ற வாலிபர் பலியானதாக தகவல் வெளியாகியது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

டிப்பர் லாரி மோதியதே வாலிபர் மரணத்திற்கு காரணம் என்றும், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ரகுபதி உயிரிழந்த இடத்தில் சில நபர்கள் "WHO KILLED RAGU?" (ரகுவை கொன்றது யார்?) என்ற வாசகத்தை எழுதியதோடு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் கிழித்து சென்றனர். 

சாலையில் எழுதப்பட்ட வாசகம் தமிழக அளவில் வைரலாகி சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது. 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, லாரி மோதிய விபத்தினாலேயே வாலிபர் உயிரிழந்ததாகவும், தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில், சாலை எழுதப்பட்ட வாசகத்தை இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் கருப்பு நிற தாரை ஊற்றியும், மணலை போட்டும் அழித்தனர்.



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...