கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 28 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர் விளக்கம்


கோவை, நவம்பர் 27 

கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர்  N.J.குமரேஷ் தெரிவித்துள்ளார். 

நேற்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்தாப் (37) என்ற வாலிபர் கத்திகளில் மறைத்து வைத்து 816 கிராம் தங்க துண்டுகளை கடத்தி வந்தார்.  அவரை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவர் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக இன்று கோவை சுங்க மற்றும் கலால் வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



அப்போது, சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் மாவட்ட ஆணையர் N.J.குமரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை விமான நிலையத்தில் நேற்று தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டுள்ளார்.  அவரிடம் இருந்து 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தங்கம் கடத்தி வருபவர்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகிறார்கள்.  பயணிகள் தங்கம் கடத்தி வருகிறார்களா என்பதை கண்காணிக்க அதி நவீன ஸ்கேனர்கள் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.8.3 கோடி ஆகும்.

தொடர்ந்து,  விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 

என்று அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...