கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் இடமாற்றம் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 27

கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, கரும்புகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



வீரகேரளம் பகுதியில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை, மத்திய அரசு லக்னோவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

105 ஆண்டுகள் பழமையான கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தை இடமாற்றம் செய்வதால், கரும்பு உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர்கள், இந்நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், தொடர்ந்து கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

Newsletter

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...