புதிய அரசுசாரா மருத்துவர்களுக்கு நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களுக்கு நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் நூறு பேர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வு செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய நிலை பரிபோகி உள்ளது. இதனை கண்டித்து மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் முறைகேடாக நிரப்பிய இடங்களை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சமூக நீதிக்கு எதிராக இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் நேரடியாக நியமனம் செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கமிட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...