செல்போனை பறித்து சென்ற இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை, நவம்பர் 29

கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவியின் செல்போனை பறித்து சென்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

கோவை ஈச்சனாரி அருகே உள்ள முத்துநகர் பகுதியில் இன்று மாலை நடந்து சென்ற ஒரு கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞன் மாணவியின் செல்போனை பறித்து தப்பி ஒடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஒடிய இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை அருகே இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இதையடுத்து, அந்த இளைஞரை போத்தனூர் காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...