சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தாக்கல் செய்த முன்ஜாமீன் வாபஸ்

நவம்பர் 30

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

கந்துவட்டி கொடுமையால் திரைப்பட இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிக்குமாரின் நெருங்கிய உறவினருமான அசோக்குமார் கடந்த 21-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்தக் கடிதத்தில், தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புசெழியன் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த அன்புசெழியன் (வயது 50) மீது குற்றம்சாட்டி, அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அன்புசெழியன் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை. அசோக்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. அன்புச்செழியன் மீது போலீசார் கந்துவட்டி வழக்குப் பதிவுசெய்த நிலையில், அன்புச்செழியனின் வழக்கறிஞர் முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...