ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்

கோவை, நவம்பர் 30

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைதொடந்து மாநிலக்குழு கூட்டம் பிற்பகல் 12 .30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

ஆர்.கே.நகர் இடைதேர்தல் தொடர்பாக இந்த மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அந்த கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மதவெறி பிடித்த பா.ஜ.க,   சோதனைகள் நடத்தி அதிமுகவை தன்னுடய கைப்பாவையாக மாற்றி இருக்கின்றது எனவும், பலவீனமான அதிமுக அரசை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக, பாஜக வேட்பாளார்களை தோற்கடித்து பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம் எனவும், அதன்படி திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப திமுகவை சொந்த மேடையில் இருந்து ஆதரக்கிறோம் எனறவர் இது தேர்தல் கூட்டணி அல்ல என  அவர் தெரிவித்தார். 

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பிளேக்ஸ்,பேனர்களை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்தவர், கோவையில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகம்,கரும்பு ஆராய்ச்சி மையம்,புலிகள் திட்ட முதன்மை வன பாதுகாவலர் அலுவலகம் ஆகியவற்றை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...