சின்னியம்பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்த வைகோ

கோவை, டிசம்பர் 1

சின்னியம்பாளையம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆய்வு செய்தார்.

கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்தின் போது பல ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், சட்டவிதியை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் போலியாக மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பதாக கணக்கு காட்டியதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.

இதன் விளைவாக சின்னியம்பாளையம் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரக்கன்றுகள் ஐந்து அடி முதல் 10 அடிகள் வரை நன்றாக வளர்ந்துள்ளன.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின் கோவை வரும் வழியில் சின்னியம்பாளையத்தில் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...