உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு 'சமபந்தி போஜனம்'

கோவை, டிசம்பர் 01

 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில் 'சமபந்தி போஜனம்' நிகழ்ச்சி, பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்சியில் எச்.ஐ.வி யுடன் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்தமர்ந்து பரிமாறப்பட்ட உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.



 

முன்னதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. பிறகு, எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக்கவும், எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்களை புறக்கணித்தல் கூடாது எனவும் பேரணியில் பங்கேற்றோர் உறுதிமொழி எடுத்தனர்.



 

இந்நிகழ்ச்சி பற்றி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையாளர், RVM. குமணன் கூறியதாவது, ‘எச்.ஐ.வி நோய் தொற்று உடையவர்களை ஒதுக்குதல் கூடாது என்ற கருத்தை முன்வைத்து 'சமபந்தி போஜனம்' நடத்தப்பட்டது. இதில், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை, எச்.ஐ.வி யுடன் வாழும் மக்களின் அருகில் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது. பொதுமக்கள் எச்.ஐ.வி நோய் பற்றியும் எச்.ஐ.வி நோயாளிகளை ஆதரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டனர்’ என்று கூறினார்.

 

ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ‘என் நல்வாழ்வு என் உரிமை’ என்ற கருத்தில் உலகம் முழுவதும் இந்த வருட எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

 

‘எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்காமல், அவர்களையும் சக மனிதர்களாக மதித்து நடத்த வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்களை சமமாக கருத வேண்டும் என்ற கருத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப் படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நோயாளி ஒருவர்.

 

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் P.G பானுமதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மருத்துவர் M. சந்திரசேகரன், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள், மருத்துவர் P. கிருஷ்ணா, துணை இயக்குநர் (குடும்ப நலம்), மருத்துவர் M. சக்திவேல், துணை இயக்குநர் (காசநோய்), மருத்துவர் K. சந்தோஷ்குமார், நகர் நல அலுவலர், மருத்துவர் B. சுந்தரேசன், மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...