எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர்


கோவையில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு பணிகளுக்காக 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர். 

அ.தி.மு.க. சார்பில் நாளை வ.ஊ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

நிழகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுக்கப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதுகாப்பு பணிகளுக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8  மாவட்டங்களில் இருந்தும், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு ஊர்காவல் படை, ஆயுதப்படை,ஆகிய துறைகளைச் சேர்ந்த போலீசாரும் இன்று கோவை வந்தடைந்தனர். 

நிகழ்ச்சி  பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார்  கோவை வந்துள்ள நிலையில் அவர்களை தங்க வைப்பதற்காக 20 தனியார் திருமணமண்டபங்களை போலீசார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...