”எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தீவிரம் காட்ட வேண்டும்”

கோவை, டிசம்பர் 02

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதை விட, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதை விட அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது போலவே பிற கடலோர மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அப்பகுதிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனத் தெரியவில்லை. 

கடலூரில் இளைஞர் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகத் தவறான தகவல்களை பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்பி வருகிறார். அவர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பேனர் வைப்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு ஒவ்வாதது.  குடும்ப விழாக்களுக்குப் பேனர் வைக்கலாமா, கூடாதா என்பதை விளக்க வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொண்டால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார். பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திமுக வேட்பாளரை ஆதரிப்பது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர் ரகு உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதிமுக சார்பில் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...