நிவாரணப் பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

டிசம்பர் 02

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஆயிரம் மின்கம்பங்களும், 100-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது தெரியவந்தது. இதன் காரணமாக 1,500 மீட்டர் உயர் மின் அழுத்தப் பாதையும், 2,400 மீட்டர் குறைந்த மின் அழுத்தப் பாதையும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பங்களை மாற்றி, மின்பாதையை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முதல் அவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற நகரங்களில் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று 4-வது நாள் ஆன பின்பும் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மின் விநியோகம் முழுமையாக சீரடையவில்லை. இதனால், 29-ந்தேதி இருளில் மூழ்கிய குமரி மாவட்டம் இன்று 4-வது நாளாக இருட்டில் தவிக்கிறது. குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர். 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அந்தத் தொகையின் மூலம் குமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...