கோவையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் தொடர்ந்து சேதப்பட்டு வருகின்றன துணை முதலமைச்சர் பெயர் : மீண்டும் கிழிக்கப்பட்டது

கோவை, டிசம்பர் 2

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் இடம்பெற்றிருந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான 'கட் அவுட் டுகள்' கோவையின் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகில் வரவேற்பு பேனர் ஒன்றை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர்.

அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்  வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றனர்.

இந்த சூழலில் இன்று மேலும் ஒரு பிளக்ஸ் பேனரில் இருந்த ஓ.பி.எஸ் பெயர் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் இருந்து சிட்ரா செல்லும் சாலையில் அ.தி.மு.க.வினர் அமைத்த பிளக்ஸ் பேனரில் இருந்த துணை முதலமைச்சரின் பெயரை இன்று மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது போல் ஹோப்ஸ் பகுதியில் வைக்கப்பட்ட சில பேனர்களும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. 

தொடர்ந்து, துணை முதலமைச்சரின் பெயர் கிழித்து  சேதப்படுத்தப்படுவது அவரின் ஆதரவாளர்களிடையே பெரும் மனவருத்தத்தை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...