எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு களைக்கட்டிய அவினாசி சாலை

கோவை, டிசம்பர் 03

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டுள்ளனர்.



நகரின் பிரதான சாலையில் ஒன்றான அவினாசி சாலையில் தொண்டர்களை உற்சாகமாக வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன. தையம் நடனம், பொய்க்கால் குதிரை, பறை இசை, கேரள புகழ் செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, எம்ஜிஆர் வேடமணிந்த நடனக் கலைஞர்கள் அவரது பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கட்சி நிர்வாகிகளின் சார்பில் நாட்டுப்புற இசைக் கச்சேரி ஆங்காங்கே நடத்தப்பட்டது. இதில், தொண்டர்களும் நடனக் கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களுக்காக தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது.



மேலும், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து அமைச்சர்களை வரவேற்றனர்.



பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் விமான நிலையம் முதல் விழா மேடை வரை ஈடுபட்டு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...