தாமதமாக வந்த வால்பாறை பேருந்து- பயணிகள் அவதி


கோவை, டிசம்பர் 4

வால்பாறை செல்லும் பேருந்து இரவு நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 1.30 மணியளவில் வால்பாறைக்கு அரசுப்பேருந்து இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் 3ம் தேதியன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு அதிமுக தொண்டர்களை அழைத்து வர பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டன. இதில், வால்பாறை பேருந்தும் ஒன்று.

இந்நிலையில், இரவு ஒரு மணியளவில் வால்பாறை செல்லவேண்டிய பேருந்து சேலத்திற்கு சென்றிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு காந்திபுரம் வந்தடையவில்லை. பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. 

பின், தாமதமாக 3 மணியாளவிலேயே பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதனால் இந்த பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்த வால்பாறை பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து, வால்பாறை செல்லவிருந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், "ஒரு வயது குழந்தையுடன் நீண்ட நேரமாக பேருந்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கமாக ஒரு மணியளவில் வால்பாறைக்கு புறப்படவேண்டிய பேருந்து இன்னும் இங்கு வந்தடையவில்லை.

சேலம் சென்றிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பேருந்தில் சென்றால் தான் காலை குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியும். மாற்றுப் பேருந்தும் இயக்கப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரி கூறுகையில், "முதலமைச்சர் வருகையையொட்டி பெரும்பாலான பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டுள்ளன. தற்போது பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் சில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், வால்பாறை செல்ல மாற்றுப்பேருந்தை இயக்க முடியாது. ஊசிமுனை வளைவுகள் அதிகமுள்ள அப்பகுதிக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் தேவை. அதனால், சேலம் சென்றுள்ள வால்பாறை பேருந்து வந்தால் மட்டுமே வால்பாறைக்கு பேருந்து இயக்க முடியும்" என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...