”கல்லீரல் மாற்றுச் சிகிச்சை மற்றும் மரபணு சிகிச்சை எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் கொண்டிருக்கும்”

கோவை, டிசம்பர் 4

கல்லீரல் மாற்றுச் சிகிச்சை மற்றும் மரபணு சிகிச்சை எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் கொண்டிருக்கும் என கிளெனாகெல்ஸ் குளோபல் மருத்துவமனையின் இயக்குநரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர். முகமது ரெல்லா தெரிவித்துள்ளார். 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் டாக்டர் பி. கிருஷ்ணராஜின் பதினொராவது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டாக்டர். முகமது ரெல்லா, "முப்பது ஆண்டுகள் என் வாழ்க்கையில் கல்லீரல் மாற்றுதல்" பற்றிச் சிறப்பு உரையாற்றினார். இங்கிலாந்திலும், இந்தியாவிலும் துவக்கத்தில், பரிணாம வளர்ச்சி மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சையின் எதிர்காலத்தைப் பற்றி அவர் பேசினார். பகுதி லிவர் டிரான்ஸ்பெக்டேஷன், துணை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, டோமினோஸ் செயல்முறை மற்றும் குழந்தை கல்லீரல் மாற்று சிகிச்சை போன்ற பல்வேறு வகையான கல்லீரல் அறுவை சிகிச்சை பற்றி அவர் பேசினார். 

"கல்லீரல் ஒரு அற்புதமான உறுப்பு ஆகும், மீண்டும் உருவாகும் திறன் கொண்டது, மூன்றில் ஒரு பங்கு, 3 வாரத்திற்குள் சாதாரண கல்லீரலின் அளவுக்கு மீண்டும் உருவாகிறது." என்றார் டாக்டர். முகமது ரெல்லா. இவர், குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 5 நாள் நடத்தியுள்ளார். இது,உலக சாதனை கின்னஸ் புத்தகப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து, டாக்டர். முகமது ரெல்லா, அனைத்து சுகாதாரத் தேவைகளையும் மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் கல்லீரல் மாற்று சிகிச்சை நிறுவனத்தை நிறுவியுள்ளார். பரம்பரை வளர்சிதை நோய்களுக்கு, கல்லீரல் மாற்று சிகிச்சை மற்றும் மரபணு சிகிச்சை எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் கொண்டிருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி. சுகுமாரன் வரவேற்றார். SNR அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லக்ஷ்மிநாராயணசாமி நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். அவர் தனது உரையில், டாக்டர் பி. கிருஷ்ணராஜின் சிறந்த குணங்கள் மற்றும் நினைவுகளை சிறப்பித்துக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை வர்த்தக அலுவலர் திருமதி. ஸ்வாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். 

இறுதியில், டாக்டர் பி.கிருஷ்ணராஜ் நினைவு அறக்கட்டளை தலைவர் திருமதி. பார்வதி கிருஷ்ணராஜ் மற்றும் பொது அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் சர்வேஸ்வரன் ஆகியோர் விருதுகள் மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினர். டாக்டர் நாகராஜா ரவி கிஷோர், டாக்டர். சீரன் ரெங்கராஜ், டாக்டர் அமரா தீப்தி பிரவல்லிக்கா மற்றும் டாக்டர் பீசாபதி சிரிஷா ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...