ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

டிசம்பர் 04

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நடிகர் விஷால், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கும்போது  , நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை அண்ணாநகர் மகா காளியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து நேராகக் காமராஜர் நினைவு இல்லத்துக்குச் சென்ற விஷால், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் சென்று,  அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும், எம்ஜிஆரின் தாயார் சத்யா நினைவு இடத்திலும், அவரது படத்துக்கும், எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி, ஜெயலலிதா நினைவிடத்திலும் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர், ஆர்.கே.நகருக்குச் சென்ற விஷாலுக்கு டோக்கன் எண் 68-வது வழங்கப்பட்டது.  சரியாக மாலை 4.20 மணிக்கு வேட்பு மனுவை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...