2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு : டிச., 21-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கிறது டெல்லி சிபிஐ நீதிமன்றம்


டிசம்பர் 05

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தீர்ப்பு தேதி எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மூன்று முறை இதற்கான அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு விபரங்கள் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி அறிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திமுக எம்பி கனிமொழியிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘பார்க்கலாம்’ என்று பதிலளித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. நிச்சயம் குற்றவாளிகள் சிறைக்குச் செல்வார்கள். நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று கூறியுள்ளார். தீர்ப்பு வெளியாகும் தேதியன்று ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...