ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து கோவை மாவட்ட அதிமுகவினர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 05

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஒன்று கூடு ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வைக்கப்பட்ட இந்த புதிய சிலைகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என யாரும் செல்லாத நிலையில், இன்று முதல் முறையாகக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் இந்த புதிய சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க ஜெயலலிதாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...