தொப்பி சின்னம் வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் கேவியட் மனுத் தாக்கல்

டிசம்பர் 05

தொப்பி சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே நேரத்தில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்கக்கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொப்பி சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...