ஜெயலலிதா மரணம்: ஜெ. தீபா 13-ந்தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

டிசம்பர் 6

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையம் அலுவலகத்தில் இதுவரை திமுக மருத்துவ அணி துணைத் தலைவர் சரவணன், மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, பொறுப்பு டீன் நாராயணபாபு, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவற்றை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

தீபாவின் கணவர் மாதவன் இன்று விசாரணைக்காக எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார். இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை நீதிபதி முன்பு எடுத்துக் கூறினார். நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர் டிட்டோ ஆஜரானார். அவர் விளக்கமும் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெ.தீபா வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜ் ஆகியோர் நாளை ஆஜராகவும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்காகத் தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் தனது முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்துப் போட்டுள்ளார். இதன் அடிப்படையில் மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...