கீரை விற்கும் இன்ஜினியர் இளைஞர்கள்

கோவை, டிசம்பர் 6

தமிழகத்தில் முதல் முறையாக கீரைக்கு இணையதளம் ஒன்று கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலேயே  கோவை  சாய்பாபா காலனியில்  முதல் முறையாக கீரை விற்பனை செய்ய தனி ஷோரூம் ஆரம்பிக்கப்பட்டு,  கீரைக்கடை.காம்(/keeraikadai.com) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

கீரைக்கடை.காம் இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஜி. ஸ்ரீராம் பிரசாத் பத்து ஆண்டுகளுக்கு முன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்துள்ளார். பின்னர் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு இதனை தொடங்கியுள்ளார். இவருக்கு பக்க பலமாக மற்றொரு இன்ஜினியர் இளைஞர் பி. பிரேம்குமார் துனை நிறுவனராக இதில் உள்ளார்.

இதுக்குறித்து ஸ்ரீராம் பிரசாத் கூறுகையில்,

"தற்போது 5 முதல் 8 வகையான கீரைகள் மட்டுமே நமக்கு பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன.ஆனால் இங்கு நாங்கள் 40 வகையான கீரைகளை விற்பனை செய்ய உள்ளோம்.

கீரைகளை எங்களது சொந்த பண்ணையில் மட்டுமின்றி,இருகூர்,சித்ரா,தொண்டாமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களிலிருந்து நேரடியாக விற்பனைக்கு பெறுகிறோம். 

விற்பனை செய்ய 2 மணி நேரத்திற்கு முன் இந்த கீரைகள் அறுவடை செய்யப்படுகிறது.

இங்கு கிடைக்கும் கீரைகள் முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன. இது தவிர பஞ்சகாவ்யா,ஜீவாமிர்தம், உள்ளிட்ட இயற்கை திரவியங்கள் பயன்படுத்துகின்றன.

மேலும்,ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,இருதய பிரச்சனைகள்,கண் பிரச்சனை,நரம்பியல் மற்றும் மறதி போன்றவைகளை கட்டுக்குள் வைக்க பல வகையான கீரைகள் இங்கு உள்ளது. இதுமட்டுமின்றி கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி எங்களது செயலியில் அளித்துளோம்.

உங்களுக்கு தேவையான கீரைகளை கீரைக்கடை.காம்(/keeraikadai.com) என்ற இணையதளம் மூலமாகவும், கீரைக்கடை ஆப்களை ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்தும் ஆர்டர் செய்யலாம்," என்றார்.

விவசாயிகளையும்,தொழில்நுட்பத்தையும் இணைக்கும் முயற்யாக  இந்த கீரைக்கடை.காம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கீரை பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றி மக்களிடையே விளக்க இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...