வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

டிசம்பர் 7

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசத்தை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசின் மானியங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைவரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இதனை எதிர்த்தும், ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

மத்திய அரசு பதில் பின்வருமாறு: மத்திய அரசின் 139 சேவை மற்றும் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு முறைப்படி நாளை (டிச.,08) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

இதனிடையே, செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும், செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, ஆதார் எண் கட்டாயமாக்குவதற்கு எதிரான வழக்குகள் மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...