ஜெயலலிதா மரணம் வழக்கு : விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்த மருத்துவர்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் நீதிபதி முன்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.  தீபா கணவர் மாதவன், திமுக வழக்கறிஞர் சரவணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர் நிர்மலா, ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயணபாபு ஆகிய இருவரும் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், நீரிழிவு நிபுணர் தர்மராஜ் மற்றும் ஜெயலலிதா மரண படுக்கையில் இருந்தபோது கைரேகை வாங்கிய மருத்துவர் பாலாஜி ஆகிய இருவரும் இன்று ஆஜராகினர். நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர் தர்மராஜ் விளக்கம் அளித்தார். அதேபோல, கைரேகை குறித்து மருத்துவர் பாலாஜியிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பின்னர், ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை, உணவு மற்றும் சந்திப்பு ஆவணங்களையும் மருத்துவர்கள் தாக்கல் செய்தனர். இதுவரையில் அரசு மருத்துவர்கள் 6 பேரிடமும் தனிநபர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...