கோவையில் 25 நாட்களில் 5 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி : தனிப்படை அமைத்து விசாரணை செய்வதாக காவல் ஆணையர் தகவல்

கோவை,டிசம்பர்.11

கோவையில் கடந்த 25 நாட்களில் 5 ஏ.டி.எம்.மையங்களிப் கொள்ளை முயற்சி நடந்த சம்பவங்களில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதியில் பல்வேறு வங்கிகளுக்குச் சொந்தமான ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் சில ஏ.டி.எம். மையங்களில் பாதுகாவலர் பணியில் உள்ளனர். ஆனால், பல ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு காமிரா மட்டுமே பொருத்தப்பட்டு பாதுகாவலர்கள் இல்லாமல் செயல்பட்டு களில்வருகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் இரவு நேரங்களில் ஏ.டி.எம். மையங்களுள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர். 

கடந்த 25 நாட்களில் மட்டும் 5 ஏ.டி.எம்  மையங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

நேற்று முன்தினம், ஹோப் காலேஜ் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.3.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 

இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹோப் காலேஜ் பகுதியில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளையில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கார் மூலம் வந்த கொள்ளையர்களின் முகம் தெரிந்துள்ளது. காரில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அது போலீயான நம்பர் என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகிறோம்" என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...