கோவை ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் கைது

கோவை, டிசம்பர் 14

கோவையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் 6 பேரை தமிழக போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையங்களில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் ரூ.26 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா தெரிவித்திருந்தார். 

அதன்படி, குற்றப்பிரிவு உதவி ஆணையர் பாலமுருகன், காவல் ஆணையர்கள் அண்ணாதுரை, அன்பரசு, சரவணன் ஆகியோரது தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

கொள்ளை சம்பங்கள் நடைபெற்ற ஏ.டி.எம்.மையங்களின் அருகே இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் வடமாநில வாலிபர்கள் இந்த கொள்ளையில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இந்த நிலையில், ஏ.டி.எம்.கொள்ளையர்கள் கார் மூலமாக நாமக்கல் மற்றும் சேலம் செல்வது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. 

இன்று காலை நாமக்கல் கீழாம்பூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்று சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்றது. இதனை தொடர்ந்து, அந்த காரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 

அப்போது காரில் இருந்த மூன்று பேரும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த கிராமத்திற்குள் தப்பியோடினர்.

குட்டி விமானம்

கிராமத்தில் இருந்த சோளைக்காட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க காமிரா பொறுத்தப்பட்ட குட்டிவிமானம் ஒன்றை போலீசார் பறக்கவிட்டனர். தொடர்ந்து கொள்ளையர்கள் மூன்று பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தன.



சேலம்

இதே போல், சேலத்தில் ஒரு மினி லாரி போலீசாரின் வாகனத்தனிக்கைக்கு நிற்காமல் சென்றது. அந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் அதில் இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஏ.டி.எம். கொள்ளையில் சம்மந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்களை இன்று மாலை கோவைக்கு கொண்டுவர இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளைக்கும்பலை பிடித்த தமிழக போலீசாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...