திருச்செந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

டிசம்பர் 14

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகார மண்டபம் இடிந்த விழுந்த விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரகார மண்டபத்தின் ஒருபகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாட்டில் சிக்கி திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதி நாராயணன் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (வயது 45) உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில், மேற்கூரை கான்கிரிட் இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த ரவி என்பவரின் மனைவி பேச்சியம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, உயிரிந்த பேச்சியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் கந்தசாமி மற்றும் செந்தில்ஆறுமுகம் ஆகிய இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ளு.ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஜெயா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இது போன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படா வண்ணம், தமிழகத்திலுள்ள திருக்கோவில்களின் கட்டட ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய உடனடியாக களஆய்வு மேற்கொள்ளவும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...