ஒகி புயல் பாதிப்பு குறித்து விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்

டிசம்பர் 14

தமிழகத்தில் ஏற்பட்ட ஒகி புயல் பாதிப்புகள் குறித்து விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

ஒகி புயல் பாதிப்பிற்குப் பிறகு, 400-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஓகி புயலால் காணாமல் போனவர்களின் இறுதி எண்ணிக்கையைத் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. வீடு வீடாகச் சென்று மீனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சேகரிக்கும் பணி முடிவடைந்தவுடன் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒகி புயல் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ. 1,843 கோடி தேவை என மத்திய அரசிடம் கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று, ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்புவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, டெல்லி மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். கடலில் தற்போது சீரான நிலை ஏற்பட்டுள்ளதால், மாயமான மீனவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என நம்பிக்கை. காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. 

தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. மாலத்தீவில் மீனவர்கள் சிலர் கரை சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள், பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...