”சர்வதேச உயிர்அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு இன்று தொடக்கம்”


கோவை, டிசம்பர் 14

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல்” மாநாட்டைத் துணைவேந்தர் ஆ.கணபதி தொடங்கி வைத்தார். 

பல்கலைக் கழகத்தின் உயிர்வேதியல், உயிர் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவியல் ஆகிய 4 அறிவியல் துறைகள் இணைந்து பிரம்மாண்டமான ”சர்வதேச உயிர் அறிவியல் மற்றும் தாவரவியல் மாநாடு” தொடங்கப்பட்டது. விழாவினைத் தொடங்கி வைத்த துணைவேந்தர் ஆ.கணபதி பேசுகையில், அறிவியல் துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அனைத்து ஆராய்ச்சியாளர்களின் கலந்துரையாடலுக்கு வழிவகுத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டுகள். அடுத்த தலைமுறை ஆய்விற்கான பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்த வந்தி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமையும். என்றார். 

இதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் பேசுகையில், பல்துறை ஆராய்ச்சி தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கும், மனித நோய்களை முறியடிக்கும் வழிகளுக்கும் தேவையான வழிமுறையாகும். எனக் கூறினார். 



இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து, அங்கிருந்த ஆய்வாளர்களோடு கலந்துரையாடுகின்றனர். தொடர்ந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களும் இந்த அறிவியல் ஆய்வு மாநாட்டில் சுமார் 169 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இம்மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...