தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகள்

கோவை, டிசம்பர் 16

தென்னையில் சுருள் வெள்ளை ஈ-க்கள் வருவதைத் தடுப்பது குறித்த கட்டுப்பாட்டு முறைகளை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, தென்னை தமிழகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு எண்ணெய்வித்து பயிராகும். கோவை மாவட்டத்தில் மட்டும் தென்னை சுமார் 85,400 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதிலும், முக்கியமாகப் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தென்னையின் எண்ணற்ற பயன்களைக் கருதி `காமதேனு` என்றும், `கற்பக விருட்சம்` என்றும் போற்றப்படுகிறது. தென்னையில் சுமார் 800-க்கும் அதிகமான பூச்சிகள் காணப்பட்டாலும், காண்டாமிருக வண்டு, சிகப்பு கூண்வண்டு, கருந்தலைப்புழு மற்றும் எரியோபிட் சிலந்தி ஆகிய பூச்சிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

வாழ்க்கைப் பருவம் :

ஆண் ஈக்கள், பெண் ஈக்களை விட அளவில் சிறியவை. முன் இறக்கைகளில் கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதன்மூலம் இவற்றை மற்ற வெள்ளை ஈக்களின் இனங்களிலிருந்து வேறுபடுத்தலாம். வயதில் முதிர்ந்த பெண் ஈக்கள் மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளைச் சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். இவை மிகவும் சிறியதாக இருப்பதால் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னையில் எளிதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தாக்குதல் அறிகுறிகள் :

இலைகளின் அடிப்பகுதியில் சுருள்வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும் முதிர்ந்த ஈக்களும் இலைகளின் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவுகள் ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இதனால், இவற்றின் மேல் கேப்னோடியம் எனும் கரும்பூஞ்சானம் படர்கிறது. 

வளர் சூழல் :

கடந்த ஆண்டில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை குறைவினால் ஏற்பட்ட வறட்சி, அதிகப்படியான வெப்பம் மற்றும் குறைந்த அளவு காற்றின் ஈரப்பதம் ஆகிய காரணிகள் இப்பூச்சிகளின் அதிகப்படியான பெருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், மழைக் காலங்களில் இப்பூச்சிகளின் சேதம் மிகவும் குறைவாக இருக்கும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் :

மஞ்சள் நிறமானது வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தின் தாள்களினால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் (நீளம் 3 அடி மற்றும் அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்கவிட்டு பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க இலைமட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் படுமாறு தண்ணீர் தெளிக்கவும். கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் (கிரைஸோபெர்லா ஜேஸ்ட்ரோவி சிலெமி), இவ்வெள்ளை ஈக்களின் எல்லா வளர்ச்சி நிலைகளையும் நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில், எக்டருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விடவும். 

இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது காக்ஸ்னேல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். மிகுந்த சேதம் ஏற்படும் சமயங்களில் ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய் 5 மில்லி அல்லது அசாடிராக்டின் 1 சதம் மருந்தை 2 மி.லி என்ற அளவில் பால்மமாக்கிகளான டீப்பால் அல்லது சோப்புடன்  கலந்து தென்னை ஓலையின் அடிப்புரம் நன்கு நனையும்படி தெளிக்கவும். 

கரும்பூசானத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மைதா மாவு (அல்லது) ஸ்டார்ச் (அல்லது) அரிசிக் கஞ்சி கரைசலை (1லிட்டர் நீருக்கு 10 கிராம்) ஓலைகளின் மேல் படுமாறு தெளிக்கவும். இதன்மூலம், கரும்பூசானம் இலையிலிருந்து உரிந்து விடும். பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரியச் சூழலை மேம்படுத்திச் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...