ரேசன் பொருட்களை முறையாக விநியோகிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோவை, டிசம்பர் 18

ரேசன் பொருட்களை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கோவை மாவட்டக்குழு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கிராமப்புறங்களில் 60 சதவிகிதம் மக்களும், நகரத்தில் குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர்.



ஆனால், தற்போது மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த உளுந்தம் பருப்பு விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். மேலும், 20 கிலோ அரசியை 10 முதல் 5 கிலோ எனக் குறைத்து வழங்குகின்றனர். கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு ஒரு கிலோ என்ற முறையிலேயே விநியோகிக்கப்படுகிறது. சர்க்கரை விலை 13.50 ரூபாயில் இருந்து 25 ரூபாய் என உயர்த்தியுள்ளனர். மேலும், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதனால், ரேசன் கடையினை நம்பியிருந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அனைத்துப் பொருட்களையும் கடந்த ஆட்சியின் போது விநியோகித்ததைப் போலவே மானிய விலையில் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...