சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்வைப் புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் : அதிகாரிகள் ஏமாற்றம்

கோவை, டிசம்பர் 18

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் புறக்கணித்ததால், அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் துவங்கியது. இதில், சிறுபான்மையினர் துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக விழாவிற்கு வந்தவர்கள் காத்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சி துவங்கி 1.30 மணிநேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வராததால் விழாவிற்கு வந்தவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினர். 

இது குறித்து விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்காக சுமார் 2 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால், பக்கத்து அறையில் இருந்த அவர் வரத் தாமதப்படுத்தியதால் பொறுமையிழந்து வெளியேறியதாகக் கூறினர். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பிதழை ஏற்று வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...