விருச்சிக ராசியில் இருந்து தனுசுக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான் - கோயில்களில் பக்தர்கள் வழிபாடு


டிசம்பர் 19

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சூரிய மண்டலத்தைச் சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி ஆகும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே, சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று (டிச.19) காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 2020 டிச.,20-ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர். திருநள்ளார் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. திருநள்ளாரில் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. இதில், காலை முதல் நளம் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு சனிபகவானைத் தரிசனம் செய்யப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

நன்மை பெறும் ராசிகள்: கடகம், துலாம், கும்பம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்

பரிகார ராசிகள்: ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...