லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பக்தர்கள் வெள்ளம்


கோவை, டிசம்பர் 19

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியிலுள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டுவிக்கும் சனீஸ்வர பகவான் ஆண்டுதோறும் ஒவ்வொரு ராசியிலிருந்தும் வேறு ராசிக்கு இடம் பெயர்ந்து வருவதாக ஐதீகம்.

அதன்படி இன்று சனிப்பெயர்ச்சி என்பதால் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள லோக நாயக சனீஸ்வர பகவான் கோவிலில் இரும்பு எஃகினால் சுமார் ஏழரை அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு வகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.



இதனை தொடர்ந்து யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.சனி பகவானுக்கு இரும்பு எஃகினால் சிலை வைக்கப்பட்டுள்ளது கோவையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...