ரியல் எஸ்டேட் தொழில் செய்து மோசடியில் ஈடுபட்டவர் காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோவை, டிசம்பர் 20

கோவை, காளம்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி மோசடியில் ஈடுபட்டவரைப் பிடித்த பொதுமக்கள் கடுமையாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவாணி சாலை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியில் ஜெகன் என்பவர் சிவன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து தொழில் நடத்தி வந்தார். இவர், பல இடங்களில் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இவர் மக்களுக்கு போலி காசோலை கொடுத்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இணைந்து செவ்வாயன்று (டிச.19) ஜெகனின் அலுவலகத்திற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சிலர் காயமடைந்த ஜெகனை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை வரவழைத்த நிலையில், பொதுமக்கள் அவரை அலுவலகத்தில் இருந்து வெளியேறவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தங்களிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர உறுதியளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தினர்.



இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில், ஜெகன் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...